சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம். எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான்.