எம்.ஜி.ஆருக்கு வி.ஐ.பி.களிலேயே பல விசிறிகள் இருந்தனர்.அவர்களில் முக்கியமானவர் ஆந்திர முன்னால் முதல்வர் மறைந்த என்.டி.ஆர் எப்போதும் அண்ணா என்றே மரியாதையாக எம்.ஜி.ஆர். குறிப்பிடுவார் என்.டி.ஆர் .ஆந்திரா திரைப்பட உலகில் எம்.ஜி.ஆரை போல் மக்களால் மிகவும் விரும்பபடம் ஹீரோவாக திகழ்ந்த என்.டி.ஆருக்கு ஆந்திரா எம்.ஜி.ஆர். என்று திரையுலகிலும் மக்களிடமும் பெயர் உண்டு.
அரசியலில் முழ்மையாக ஈடுபடுவது என்று முடிவு செய்ததும் எம்.ஜி.ஆரிடம் ஆசி வாங்க சென்னைக்கு வந்தார் என்.டி.ராமராவ்.ராமபுரம் தோட்டத்தில் மகிழச்சியோடு அவரை வரவேற்று கட்டி தழுவினார் எம்.ஜி.ஆர். உங்களுக்கு அரசியலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நீங்கள் நம்புகிறிர்களா ? என்று கேட்டார் எம்.ஜி.ஆர் .கண்டிப்பாக நம்புகிறேன் .உங்கள் ஆசி வேண்டும் என்றார் என்.டி.ஆர் .கட்சிக்கு என்ன பெயர் வைக்க போகிறிர்கள் ?தெலுங்கு ராஜ்யம் வேண்டாம் தெலுங்கு தேசம் என்று வையுங்க நல்லா பொருத்தமாக இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் ஆலோசனைக்கு மறுபேச்சு சொல்லாமல் நீங்கள் சொல்கிற மாதிரி நான் ஆரம்பிக்கிற கட்சிக்கு தெலுங்கு தேசம் என்றே பெயர் வைக்கிறேன் .ரொம்ப தாங்க்ஸ் அண்ணா என்றார். தெலுங்கு தேசம் என்ற கட்சியின் பெயர் ராமபுரம் தோட்டத்தில்தான் உருவானது.என்.டி.ராமராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றது .வெற்றி பெற்ற பிறகு பதவி ஏற்பதற்கு முன் அவருடைய மந்திரிகள் படைசுழ காலை ப்ளைட்டில் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தார் என்.டி.ராமராவ் .ஏர்போட்டிளிருந்து நேராக ராமபுரம் தோட்டத்திற்கு வந்தனர்.மகிழிச்சி போங்க எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து பொன்னாடை பேர்த்தி தன் நன்றியை தெரிவித்து கொண்டார்.
நல்லபடியான் ஆட்சி செய்து மக்களுக்கு நல்லதே செய்யணும் என்று அவரை வழுத்தினார் எம்.ஜி.ஆர்
தகவல் -பி.கே .செல்வராஜ் ,திருச்சி
தினமலர் (வாரமலர்) ஜூன்
Article From: Olikirathu Urimai Kural