Thursday, October 13, 2011

இந்த ஸ்டுடியோவை புரட்சி தலைவர் அவர்களும் ,பெரியவர் சக்ரபாணி அவர்களும் எப்படி வாங்கினார்கள்.

MGR JANAKI college - adayar           Sathya Studio Has Now Become Into A College After M.G.R Passed Away

1959 ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்தாக ஒரு சிறுமலர் அச்சடித்து இப்படங்களை விளம்பரமாக வெளியிட்டார்.

நாடோடியின் மகன்,தேனாற்றங்கரை, கேரள கன்னி,

தூங்காதே தம்பி தூங்காதே,காஞ்சி தலைவன் ,சுமைதாங்கி ,காணி நிலம்.

காஞ்சி தலைவன் மு.கருணாநிதி எழுதினார் ,சுமைதாங்கி அண்ணா அவர்கள் எழுதினார், தேனாற்றங்கரை வித்வான்.வே.லட்சுமணன் எழுதினார்,மற்ற படங்களை எழுதாளர் கே.ரவீந்தரிடம் எழுத சொன்னார். கேரள கன்னி படம் திப்பு சுல்தான் வாழ்வில் நடந்த வரலாற்றின் ஒரு பகுதி. தூங்காதே தம்பி தூங்காதே குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. அந்த சமயத்தில்'அரசிளிங்குமரி' படப்பிடிப்பு நடந்தது.

"ஸகேரே மேளச்" என்ற ஆங்கில கதையின் தழுவல்,மு.கருணாநிதி கை வண்ணத்தில் உருவான் படம். படம் முடியும் தறுவாயில் அதன் தயாரிப்பாளர் சோமசுந்தரம் காலமாகி விட்டார்.மனநிலை சரியில்லாத அவர்களின் மகளும், தந்தை இறந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டார்.ஒரே நாளில் தந்தை ,மகள் சாவை கண்ட அக்காட்சி செம்மலை உருக்கியது.

அப்போது ஜுபிடேரின் நெப்ட் யூன் ஸ்டுடியோ விலைக்கு வந்தது .செம்மல் உருவானது அந்து படப்பிடிப்பு நிறுவனத்தில்தான். அவர்கள் முதல் கதாநாயகனாக நடித்த 'ராஜகுமாரி' எடுக்கப்பட்டதும் அதே நிலையத்தில்தான்.அவருக்கு புகழ் தந்த 'மரமயோகி' யும் எடுக்கப்பட்டது அங்கு தான்.

வேலை செய்த ஸ்டுடியோவை வாங்குவதில் சிரமம் இருந்தாலும் பெருமைப்பட்டார்.அதன் பங்குகளை ,தன்பெய்ருக்கு மாற்றி பணம் கொடுத்தார்.

அதற்கு தன் தாயின் பெயரை வைத்து “சத்யா” ஸ்டுடியோவாக ஆக்கினார்

ஒரு சொந்த படப்பிடிப்பு நிலையத்தை உரிமையாக்கி கொண்ட முதல் நடிகர் -நம் நெஞ்சுக்கினியவர்தான்

1     2

Click On The Image To Read Fully

 

Image Article From :Olikirathu Urimai Kural

Main Article From : PonnmanaChemmal MGR-by K.Ravinder

Related Posts Plugin for WordPress, Blogger...