Thursday, August 18, 2011

எம்.ஜி.ஆர் ஒரு அதிசயம்--கே.பி.ராமகிருஷ்ணன்

 

 

 

 

எம்.ஜி.ஆர் எனும் மூன்று எழுத்து உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான தமிழர் உள்ளங்களில் நீக்கமற நிறைந்துள்ள ஒன்று என்பதை யாரும் மறுக்க இயலாது. தமிழ் திரைத்துறை மற்றும் அரசியல் வரலாற்றிலும், இவரைப் போல் இறுதி வரை வெற்றிப் பயணத்தை தொடர்ந்தவர் எவரும் இல்லை. இரு துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி மண்ணை விட்டு மறைந்து 23 வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்றளவும் வாழ்ந்து வருபவர். இது எப்படி இவரால் சாத்திய மாயிற்று என தங்களுக்குள் கேள்விக் கணைகளை தொடுத்து வருபவர்கள் இன்றும் உண்டு. இதற்காக எம்.ஜி.ஆர். உழைத்த உழைப்பு, எதிர் கொண்ட சவால்கள், செய்துள்ள மனித நேயச் செயல்கள் உள்பட இன்னும் பல அம்சங்கள் எண்ணிலடங்கா. – அவைகளை ஒரு எல்லைக்குள் கொண்டு வர இயலாது.

தன்னலமில்லாமல் அவர் செய்துள்ள செயற்கரிய செயல்களே இன்றும் அவரது பெயரை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தினமலர் நாளிதN™ ஒரு எளியவர், எம்ஜி.ஆருக்கு தன் சொந்த செலவில் கோயில் கட்டுகிறார் என்ற செய்தி வந்தது. இது மட்டுமின்றி முன்பே சில பகுதி களில் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டப்பட்டுள்ள செய்திகள் உள்ளன. அவருக்காக கோயில் கட்டும் இவர்கள் செல்வந்தர்கள் அல்ல. எம்.ஜி.ஆரால் பொருள் உதவி பெற்றவர்களும் அல்ல. அவருடன் இருந்தவர்களும் அல்ல. திரையிலும், அரசியலிலும் அவரது நற்பண்புகளாலும், அறிவுரைகளாலும் ஈரக்கப்பட்டு அவரது பக்தர்கள் ஆனவர் கள். சுயநலம் மிகுந்த இவ்வுலகில், அனைத்  தும் வியாபாரமாகிப் போன இவ்வுலகில் இவர்களால் எம்.ஜி.ஆர் போற்றப்படுகிறார் என்றால் அது தானே அவரது வாழ்வின் நேர்மை! மேன்மை! சிறப்பு! இது வேறு எந்த நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் சாத்திய மற்றது. எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு இப்பூவுலகில் பிறந்த எண்ணற்றவர் கள் திரையில் அவரது திரைப்படங் களை கண்டும், அவர் பற்றிய நூல் களை படித்தும், அவரது பக்தர்களானதை கண்கூடாகப் பார்க்கிறோம். திரைப்பட நடிகராக, அரசியல் தலைவராக இவருக்கு மட்டுமே, மாத இதழ்கள் பல இன்றளவும் வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Click Here To Read The Article  Fully

மொத்தமாக படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

Article From : Mr Govindraj(K.P.Ramakrishnan’s Son)

                              http://www.puthiyayugam.com

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...