என் சின்ன வயதில் எம்.ஜி.ஆர் படம் முதலில் தாம்பரத்தில் வெளியாகும். பிறகுதான் சென்னை நகரில் வரும். நான் முதல் நாளே 'நாடோடி மன்னன் ' போன்ற படங்களை தாம்பரத்துக்கு போய் பார்த்து ரசித்தவன்
அப்படிப்பட்ட ரசிகனாக இருந்த நான்,பின்னாளில் அவருடன் மிக நெருங்கி பழகுவேன் என்று அப்போது கனவுகூட கண்டதில்லை .
தமிழ் திரையுலகம் எம்.ஜி.ஆர். என்ற பெயரை எப்படி எந்த நள்ளும் மறக்க முடியாதோ,அப்படியே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்னால் அவரை மறக்க முடியாது.என்னிடம் தனிப்பாசம் கொண்டிருதவர் அவர்.
அவரோடுதான் எத்தனை அனுபவங்கள் ..... எத்தனை சம்பவங்கள்!
என் தாய்.தந்தை ,சகோதர்கள் என்னை 'சரவண்' என்று அன்புடன் அழைப்பார்கள்.இது எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிந்து அவரும் அப்படியே ஒரு நாள் என்னை அழைத்தார்.
ஸார்! என்னை சரவணன் என்றே கூப்பிடுங்கள் என்று நான் கேட்டு கொண்டேன்.
'உங்கள் சகோதர்கள் உங்களை எப்படி கூப்பிடுவார்கள்?' என்று கேட்டார்
'சரவண்' என்றுதான் என்றேன்
'நானும் உங்கள் சகோதரந்தானே? அப்படியிருக்க நான் மட்டும் வேறு எப்படி அழைப்பது?' என்று அவர் சொன்னபோது அந்த அன்புக்கு அடிமையாகி போனேன்.
எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செயம்மல் எந்த நாளும் இருந்ததில்லை என்பது ஊரறிந்த உண்மை.
உடற்பயிற்சியின் நன்மை பல முறை எனக்கு அவர் எடுத்து சொன்னதுண்டு.ஒரு முறை ஊட்டியை அடுத்த குன்னூரில் நாங்கள் எல்லாம் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு ஒவ்வொருவரும் இரண்டு ஆட்கள் போல நடமாடி கொண்டிருந்தோம்.
ஒரு நாள் அதிகாலை தன் அறையில் எம்.ஜி.ஆர் திறந்த மார்புடன் அமரிந்திருந்தார்.வியர்த்து போயிருந்தது.
நாங்கள் இப்படி குளிரில் நடுங்கி கொண்டிருக்கிறோம்.இவருக்கு மட்டும் எப்படி வியர்கிறது என்ற வியந்து நின்றபோது ,'நான் இப்போதுதான் எக்ஸர்சைஸ் செய்து முடித்தேன்.உடற்பயிற்சி செய்து வியர்வை வரும்போது குளிர் அண்டாது என்று விளக்கம் சொன்னார் .
தொடரும் …….
Article From: மனதில் நிற்கும் மனிதர்கள் –பாகம் - 4
Coming Soon :
இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் மக்கள் திலகத்தை பற்றி
அ. இ.அ. தி.மு.க வரலாறு