தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.
கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார்

No comments:
Post a Comment