பாட்டு வரும் ...(நான் ஆணையிட்டால்)
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
(உன்னை )
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
(உன்னை )
பட்டுச் சேலை .....(தாய் சொல்லைத் தட்டாதே)
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
அரும்பு மீசை துள்ளி வர
அழகுப் புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே -
என்னைக்கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
கையில் எடுத்தால் துவண்டு விழும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதியில் நிறையும் முகத்தழகு
யாவும் உந்தன் தனியழகு
(கட்டுக்)
உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மனதில் நின்றது ஒரு முகமே
மங்கை உந்தன் திருமுகமே
காசு பணங்கள் தேவையில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
தாவி வந்தது என் மனமே -
இனிதாழ்வும் வாழ்வும் உன் வசமே
(கட்டு)