சுமார் எட்டு வயது இருக்கும் போது எனக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் காணும் வாய்ப்புக் கிடைத்தது.அதற்கு வழி வகுத்தவர் அவரது தீவிர ரசிகரான என் தந்தை. எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பலர் அவரைக் காணும் வாய்ப்புக்காகத் தேசிய அரங்கத்தின் நுழைவாயிலில் அலையெனக் குழுமி யிருந்தனர். திடீரெனக் கூட்டத்தில் சலசலப்பும் ஆரவாரமும் பெருகியது, கோஷங்கள்முழங்கின, கைதட்டல்களும், விசில்களும் காதைக் கிழித்தன. எம்.ஜி.ஆர் அவர்களின் வண்டி தென்பட்டது, ரம்யமானதோற்றமும், புது மலர்போன்ற புன்னகையும் பூத்தவாறுவண்டியில் இருந்து இறங்கினார்
எம்.ஜி.ஆர்..அவரது முகத்தைக்கண்டதும், சிறுவனான என் மனமும் அவரதுவசீகரத்தால் ஈர்க்கப்பட்டது. .என் தந்தையின் கையைப் பற்றி, ‘எம்.ஜி.ஆரின் புன்னகை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது' என்று கூறினேன். நிகழ்ச்சி முடிந்ததும்,என்னை அழைத்துக்கொண்டு அரங்கத்தைவிட்டு வெளியேற அப்பா மிகவும்சிரமப்பட்டார்.எப்படியோ கூட்டத்தோடு கூட்டமாக வெளியேறி எம்.ஜி.ஆருடையவண்டி புறப்படும் வேளையில், அதன்அருகே போய்நின்றுகொண்டார். அந்தகூட்டத்தின் தள்ளுமுள்ளுவில் நான் அப்பாவைப் பிரிந்து விட்டேன்